தாடகை வதைப் படலம் - 379

bookmark

அகத்தியன் சபித்தல்

379.    

‘தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!” என உரைத்தனன். அசனி எஞ்சவே.
 
அளப்ப   அரும் சலதி- அளக்க அரிய கடல்; தந்தவன் - தந்த
அகத்தியன்;  கனல்  உமிழ்  -  நெருப்பை உமிழ்கின்ற; உங்கரித்து -
ஊங்காரம் செய்து; இழிக - இழிந்தவர்களாகுக; அசனி - இடி.   20-14