தாடகை வதைப் படலம் - 376
அகத்தியர் விழிக்கச் சுந்தன் சாம்பராதல்
376.
‘விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை. கலை. இரலையை உயிர் உண்டு. ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப. மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.
விழைவு - விருப்பம்; உழை - பசு (மானுமாம்); கலை - கலைமான்;
இரலை - புல்வாய்; வழை - சுரபுன்னை; மரன் - மரம்; மடிப்ப -
அழிக்க; தழல் - நெருப்பு; என - என்னும்படி; விழித்தனன் -
விழித்தான். 20-11
