தாடகை வதைப் படலம் - 375

bookmark

சுந்தன் அகத்தியராச்சிரமத்தில் மரங்களைப்பறித்து வீசுதல்

375.    

தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர.
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மா தவன் உறைவிடம் அதனின் வந்து. நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.
 
தீது   உறும்- தீங்குடைய; அவுணர் - அரக்கர்; தீமை தீர்தர  -
தீங்கு தீர; எலாம் - எல்லாம்;மாதவன் - அகத்தியன்; நீள் பாதவம் -
பெரிய மரம் (மலையுமாம்.)                              20-10