தாடகை வதைப் படலம் - 368

bookmark

சுகேது தவஞ் செய்தது

368.    

‘அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்.
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி. நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.
 
அன்னவன்- அந்த சுகேது; மகவு - குழந்தை; இலாது - இல்லாது;
வைகுறும் -  தங்கும்;  முதல்வன்  -  பிரமன்;  வழுத்தி - வணங்கி;
பல்நெடும் பகல்  -  பல  நாட்கள்;  பயின்ற  - செய்த; பான்மை -
தன்மை.                                            20-3