தாடகை வதைப் படலம் - 367

bookmark

சுகேதுவின் வரலாறு (367-371)

367.    

‘இயக்கர்தம் குலத்துளான்.
   உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான்.
   எரியின் வெம்மையான்.
மயங்கு இல் சற்சரன். எனும்
   வலத்தினான். அருள்
துயக்கு இலன் சுகேது என்று
   உளன் ஒர் தூய்மையான்.
 
இயக்கர்  -   கந்தருவர்;  மொய்ம்பு  -  வலிமை; வியக்குறும் -
வியப்படையும்;  வெம்மை  -  வெப்பம்;  துயக்கு - குற்றம்  (சற்சரன்
மகன் சுகேதுவாம்).                                     20-2