தாடகை வதைப் படலம் - 366

bookmark

தாடகை வரலாறு கூறுதல்

7 தாடகை வதைப் படலம்
 
366.  

 ‘கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து.
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:
 
கல்நவில்    தோள்- கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் -
பிரமன்;  வாய் மடுத்து - வாயில் பெய்து; கூற்றம் - எமன்; அறைய -
கூற.                                               20-1