டேக் யுவர் சீட்னு சொன்னீங்க
லெட்டர்லே நிற்க நிற்கன்னு எழுதாதீங்க.
ஏன்?
படிக்கிறவங்களுக்குக் கால் வலிக்கும்.
நீ எந்தச் சிகரெட்டைப் பிடிப்பாய்.
மற்றவர்கள் கொடுப்பதை!
இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!
அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
தெரியலையே!
வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!
அதே வாட்சா?
இல்லே, காவேரி.
