இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு
ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
நான்கு!
இல்லை 22.
என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?
ரோட்ல தான்!
பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?
மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை.
