டி. என். தீர்த்தகிரி
வாழ்க்கை வரலாறு
டி. என். தீர்த்தகிரி தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தருமபுரி மாவட்டத்துடன் பிரிக்கப்படாத சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.
பிறப்பு:
தீர்த்தகிரியார் தர்மபுரியை அடுத்த அன்னசாகரத்தில் நவம்பர் 4, 1880 அன்று தர்மராஜா கோவில் பரம்பரை தர்மகர்த்தாவான நாராயண முதலியாரின் மகனாகப் பிறந்தார். தீர்த்தகிரியார் அதிகம் படித்தவர் அல்லர் ஆனாலும் அவர் ஒரு சித்த வைத்தியர் மற்றும் இலக்கியவாதி.
சுதந்திர போராட்டம்:
இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியின் செல்வாக்கு காரணமாக அகிம்சை வழியில் செல்வதற்கு முற்பட்ட காலத்தில் துப்பாக்கியும், குண்டும் ஏந்தி வன்முறையால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற கருத்து கொண்டவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தீர்த்தகிரியார் 20ம் நூற்றாண்டில் துவக்கத்தில் புரட்சி வழியில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோரது அணியில் அவர்களின் தோழராக இருந்தார். ஆஷ் துரையின் படுகொலையாளியைத் தேர்வு செய்ய சீட்டு குலுக்கிப் போடப்பட்ட பெயர்களில் தீர்த்தாகிரியாரின் பெயரும் ஒன்று. ஆனால் அதில் வாஞ்சிநாதன் தேர்வாகி ஆஷைச் சுட்டுக் கொன்றார். தீர்த்தகிரியார் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அதனால் முதலில் சுதந்திரம் நமது பிறப்புரிமையென்று குரல்கொடுத்த பாலகங்காதர திலகரைப் பின்பற்றினார். ஆயினும் மகாத்மா காந்தியின் அகிம்சை நெறியே அரசியல் வழக்கானபோது அதனை ஏற்று காங்கிரசு தொண்டராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். சேலம் விஜயராகவ ஆச்சாரியாரால் விடுதலை இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவரான டி. என். கந்தசாமி குப்தாவினைத் தனது அரசியல் குருவாக தீர்த்தகிரியார் குறிப்பிட்டுள்ளார்.
ஊரெங்கும் பிளேக் நோய் பரவியதால் தீர்த்தகிரி அன்னசாகரத்தை விட்டு குடியாத்தம் சென்று ஓராண்டு தங்கினார். அப்போது அவர் சென்னையில் மருத்துவ சாலை (கருணை பிரவாக நிதிவைத்திய சாலை, லிங்கி செட்டித் தெரு) நடத்தினார். அக்காலகட்டத்தில், சென்னை மவுண்ட் ரோட்டில் (அண்ணா சாலை) இருந்த கர்னல் நீல் சிலையை 1927-1928ல் எஸ். என். சோமையாஜுலு தலைமையில் அகற்ற காங்கிரசார் முடிவு செய்தனர். அதன்படி, நாலைந்து நாட்கள் அச்சிலையை உளியால் சிறுகச், சிறுக உடைத்து வந்தனர். அதிகாரிகளும் சிலை பழுது பார்க்கும் வேலை நடக்கிறதென்று போய்விட்டனர். ஒரு நாள், மகாத்மா காந்தி வாழ்கவென கோஷமிட்ட பிறகு சிலை சேதமடைந்திருப்பதைக் கவனித்த பிரிட்டிஷ் அதிகாரிகள் காங்கிரசு தொண்டர்களைக் கைது செய்தனர். அவர்களுள் தீர்த்தகிரியும் ஒருவர்.
சிறைவாசம்:
1906-ல் 1½ ஆண்டுகளும், 1916-ல் 2 ஆண்டுகளும், 1930-ல் உப்பு சத்தியாகிரகத்திற்காக கண்ணனூர் சிறையில் 1½ ஆண்டுகளும், 1931-ல் சட்ட மறுப்பிற்க்காக 1 ½ ஆண்டுகள் திருச்சி சிறையிலும், 1942-ல் வெள்ளையனே வெளியேறு முழக்கத்திற்காக இந்திய அரசியல் சட்டம் கிரிமினல் பிரிவு 17(1)-ன் படி 2 ஆண்டு சிறை தண்டனை அலிபுரம் சிறையிலும் ஆக மொத்தம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 8½ ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
கண்ணனூர் மற்றும் திருச்சி சிறையில் இருந்தபோது தான் சுப்ரமணிய சிவா அவர்களுடனான நட்பு வலுப்பெற்றது. இவரின் துணிச்சலைக் கண்ட சுப்ரமணிய சிவா இவருக்கு ’எம்டன்’ என்று பெயரிட்டார். சிவா அவர்கள் சிறையிலிருந்து தன் சொந்த ஊரான வத்தலகுண்டு செல்லாமல் தீர்த்தகிரியாருடன் தர்மபுரிக்கு அருகிலுள்ள பாப்பாரப்பட்டி சென்று தன் இறுதி காலத்தை அங்கேயே கழித்தார். இதற்கு தீர்த்தகிரி முதலியாரும் அவரது சகலை சின்னமுத்து முதலியாரும் சுப்ரமணிய சிவா மீது காட்டிய அன்பே காரணம். இவர் சிறையில் சுப்பிரமணிய சிவாவுடன் செக்கிழுத்தார். சிறையிலிருக்கும் போது தடை செய்யப்பட்டிருந்த ‘பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தைச் சிறைச்சாலையிலேயே நடித்துக்காட்டினார்.
பொது வாழ்க்கை:
காமராசர், வ. உ. சிதம்பரனார், திரு.வி.க., கிருபானந்த வாரியார், சுப்ரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், என். ஜி. ரங்கா, சாது சீனிவாசமூர்த்தி போன்றவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
1930-1931-ல் கள்ளுக்கடை மறியலை தருமபுரியில் தலைமையேற்று நடத்தினார்.
1936-ல் திரிபுரா காங்கிரஸில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தேர்தலில் காந்தியடிகளின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமையாவுக்கு எதிராக ராஜாஜியிடம் சொல்லிவிட்டே சுபாஸ் சந்திரபோஸுக்கு ஓட்டளித்தார்.
தீர்த்தகிரியார் அவர்கள் சிலகாலம் பாரதியாருடன் தலைமறைவாகவும், சிலகாலம் நாடு கடத்தப்பட்டும் பாண்டிச்சேரியில் இருந்தார். விடுதலை போராட்டங்கள் பலவற்றிலும் தனக்கு வாய்த்த மெய்த்தொண்டராக அருஞ்சகாவாக, தியாகச்சுடராக தீர்த்தகிரியார் திகழ்ந்தாரென தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் சங்கத்தலைவர் டாக்டர் எம். சோமயாஜிலு கூறியுள்ளார்.
மக்களின் விடுதலை போராட்டத்தை ஊக்குவிக்க தீர்த்தகிரியார் 1901-ல் சுவாமி விவேகானந்தரையும் , 1921-ல் காந்தியையும், 1937-ல் நேருவையும் தர்மபுரிக்கு வரவழைத்தார்.
சிறைக்கு வெளியே வாழ்ந்த காலத்தில் தீர்த்தகிரியார் சுதந்திர போராட்டத்தை விரிவுபடுத்துவதில் ஆழ்ந்த அக்கறை காட்டினார். சுதந்திர போராட்டத்தைப் பரப்ப நாடகம் சிறந்த உத்தியாகயிருந்தது. இவர் பலமுறை வள்ளித் திருமணம், கோவலன், சதாரம் போன்ற நாடகங்களைத் தானே எழுதியும், நடித்தும் அரங்கேற்றியவர். நாடகத்தினிடையே சுதந்திரப் போர் கருத்துக்களைத் தக்கவாறு வெளிப்படுத்துவார். சுதந்திரப் போராட்டம் பற்றி துண்டு பிரசுரங்களை ஊரெங்கும் வழங்குவார். விடுதலை போராட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட காலமென்பதால் போராட்ட செய்திகளைக் கையெழுத்து பிரதிகளாக்கி வெளியிடுவது அவசியமான பணியாகயிருந்தது. அந்த சமயத்தில் கடலூரைச் சார்ந்த அஞ்சலை - முருகப் படையாச்சி தம்பதியினர் செய்திகளை ஊர் ஊராகச் சென்று சேகரிப்பதும், வெளியிடுவதுமாக இருந்தனர். அவர்களோடு சேர்ந்து தீர்த்தகிரியாரும் ஊரெங்கும் வழங்கி வந்தார். சுதந்திர போருக்கு இளைஞர்களை ஆயத்தப்படுத்தியும், தொண்டரணியைத் திரட்டியும் பணியாற்றிய இவரின் வழிகாட்டுதலில் தருமபுரி மாவட்டத்தில் தொண்டர்கள் பலர் உருவாயினர். தீர்த்தகிரியாரின் மாப்பிள்ளை எம். எஸ். ஐயம்பெருமாள், முன்னாள் ஜனதா தளத் தலைவர் ஜி. ஏ. வடிவேலு, டாக்டர். தெய்வம் போன்றவர்கள் தீர்த்தகிரியின் தலைமையில் செயல்பட்டவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள்.
எல்லோரும் கல்வியறிவு பெற வேண்டுமென்ற ஆர்வமே இவரை தர்மபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள செங்குந்தர் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டச் செய்தது. அப்பள்ளிக்குக் கட்டிடம் கட்டித் தந்ததில் தீர்த்தகிரியாரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.
சித்த வைத்தியம்:
தன் குடும்ப வாழ்விற்குத் தேவையான பணத்தை தான் அறிந்த நாட்டு மருத்துவத்தின் மூலமே ஈட்டினார். பற்பொடி, தலைவலி மருந்து, லேகியங்கள் தயாரித்தார். தான் தயாரித்த சித்த பல்பொடிக்கு தேச பக்தர் சித்ரஞ்சன் பெயரில் சித்ரஞ்சன் பல்பொடி என்றும், தலைவலி மருந்துக்கு சித்ரஞ்சன் பாம் என்றும் பெயரிட்டார். ஆயுர்வேத மருத்துவத்தில் இருந்த திறமையை சுப்பிரமணிய சிவாவின் அறிவுரையால் விரிவுபடுத்திக் கொண்டார் . சிறை வாழ்க்கையின் போது நூற்றுக்கணக்கான போராட்ட வீரர்களின் வயிற்றுக்கடுப்பு நோயை ஆங்கில மருத்துவம் பலன் தராததால் சிறை அதிகாரியின் வேண்டுகோளின்படி குணமாக்கினார். 1942-ல் அலிபுரம் சிறையில் இருந்த போது சிறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்குக் கூட மருத்துவம் செய்து குணமாக்கினார் .
நெசவுத் தொழில்
நெசவுத்தொழிலில் ஆரம்பம் முதல் ஈடுபாடும், அனுபவமும் கொண்ட இவர் தர்மபுரியில் உள்ள நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை 12.01.1938-ல் நிறுவினார்.
பொறுப்பு/பதவி:
தியாகி தீர்த்தகிரியாரைப் பற்றி தமிழ்நாடு அரசாங்க செய்தித்துறை 18.11.1966 அன்று வெளியிட்ட செய்தி. இது தியாகி தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா மலரிலிருந்து தொகுக்கப்பட்டது.
சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும்,
தர்மபுரி தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும்,
தமிழ்நாடு கைத்தறி சங்க துணைத் தலைவராகவும்,
ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும்,
1947-ல் தர்மபுரியில் மாவட்ட சித்த வைத்திய சங்கம் நிறுவி அதன் தலைவராகவும்,
சென்னை மாநில சித்த வைத்திய சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும் விளங்கினார்.
தியாகம், மறைவு:
1928-ம் ஆண்டு டாக்டர் அன்சாரி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு கயிற்றுக் கட்டில்கள் வாங்கி அனுப்பியதில் இவருக்கு பெருத்த பொருள் இழப்பு ஏற்பட்டது. ஆயினும் அதற்காக வருந்தவில்லை. நாட்டின் விடுதலைக்காகவே தமது உடல், உழைப்பு, உயிர் அனைத்தையும் அளித்து தான் பெரிய நிலச்சுவான்தாராய் இருந்தும் தன் சொத்துகளை எல்லாம் நாட்டின் விடுதலை சேவைக்காக செலவு செய்து இவர் 13.03.1953-ல் ஏழ்மையிலேயே இறந்தார்.