ஜான் குவின்சி ஆடம்ஸ்

ஜான் குவின்சி ஆடம்ஸ்

bookmark

ஜான் குவின்சி ஆடம்ஸ் ஜூலை 11, 1767 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது குடியரசுத் தலைவராக (மார்ச் 4, 1825 – மார்ச் 4, 1829) இருந்தார். இவர் பெடரல் கட்சி, டெமாக்ரட்டிக் - ரிப்பப்ளிக்கன் கட்சி, நேஷனல் ரிப்பப்ளிக்கன், பின்னர் விகு கட்சி ஆகிய கட்சிகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தார். இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகிய ஜான் ஆடம்ஸின் மகன் ஆவார். கல்வி வளர்ச்சிக்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் பல கருத்துக்களை முன்வைத்தார் ஆனால் காங்கிரசின் ஒப்புதல் பெறமுடியாமல் இருந்தார். வெளியுறவுக் கொள்கைகளில் மன்ரோ கொள்கையை வளர்த்தெடுப்பதில் அக்கரை காட்டினார். அடிமைகள் முறையை எதிர்த்தார். உள்நாட்டுப் போர் மூண்டால் போர்க்கால வல் ஆணைகளைப் பயன்படுத்தி் அடிமை முறைய ஒழிக்க முடியும் எனக் கூறிவந்தார். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இதே முறையில் 1863 ல் ஈடெழுச்சி அறிவிப்பு (Emancipation Proclamation of 1863) செய்து அடிமை முறையை ஒழித்தார். இவர் பிப்ரவரி 23, 1848 ஆம் ஆண்டு இறந்தார்.