சொட்டு மருந்து
ஒருவர்: "என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்."
மற்றவர்: "அடப் பாவமே! அப்புறம்?"
ஒருவர்: "அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துருச்சு."
"தண்ணியில சக்தியே இல்லைன்னு சொல்றீங்களே...எப்படி?"
"அதான் தண்ணியில மின்சாரம் எடுத்துறாங்களாமே...!"
"மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்ன செய்யலாம்?"
"எல்லார் கண்ணுக்கும் சொட்டு மருந்து ஊற்ற வேண்டியதுதான்."
"டாக்டர் உங்களை ஓட்டலில் எதுவும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாராமே...?"
"ஆமாம்! அதனால்தான் ஓட்டலிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து வீட்டில வைத்துச் சாப்பிடுறேன்...!"
"பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் நிறுத்திட்டே...?"
"அவள் என்னை விட ரெண்டு வயசு அதிகமாம். அதனால ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்."
