சுவிஸ் பேங்க்

bookmark

"மன்னர் எதற்கு போர்க்களத்தில் சாக்கடைக் கால்வாய் வெட்டச் சொல்கிறார்..?" 
"எதிரிப் படைகளை கொசுப் படை கொண்டு விரட்டப் போகிறாராம்..!"

"குடிபோதையில இருந்த மன்னர்கிட்ட போய், கஜானா 'ஃபுல்'லா இருக்குன்னு சொல்லியிருக்க வேணாமா... ஏன்?" "பின்ன... குவாட்டர், ஆஃப் எல்லாம் இல்லையான்னு கேட்கறார்...!"

"டாக்டர்... எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கறதால இங்க வந்துட்டேன்! நீங்க ஏன் இந்த அர்த்தராத்திரியில கிளினிக்கை திறந்து வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க?" "எனக்கு தூக்கத்துல ட்ரீட்மெண்ட் பண்ற வியாதி இருக்குதே..!"

"தலைவரோட ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லாம போயிடுச்சு..." "என்ன செய்தாரு..?" "சுவிஸ் பேங்க்கோட கிளையை நம்ம தொகுதியில ஆரம்பிக்கச் சொல்லப் போறேன்னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டுத் திரியிறாரு..."

"இளைஞர்களைக் கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு...?" "என்ன செய்தாரு...?" "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாணவ-மாணவியர்களின் அரியர்ஸையும் தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு...!"