பங்கு

bookmark

"தலைவரே! 'அந்த 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல்'னு மேடையில திட்டிப் பேசினீங்களே... அது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி!"
"இவ்வளவு நாளைக்கு வட்டி போட்டுக் கூட்டிப் பாரு கணக்கு சரியா வரும்!"

"உங்கள் நோயை முழுமையாகக் குணப்படுத்தி விட்டேன்."
"இனி ஆபத்து இல்லையா டாக்டர், நான் பிழைத்துக் கொள்வேனா?"
"நிச்சயமாகச் சொல்ல முடியாது. சாவதற்கு முன்பு நோய் குணமாகி விட்டது. செத்தாலும் திருப்தியாகச் சாகலாம் அவ்வளவுதான்."

"'மரியாதை நிமித்தமா என்னைச் சந்திக்க வந்தாங்க'னு தலைவர் சொல்றதை என்னால் நம்ப முடியலை!"
"யாரை அப்படிச் சொல்றாரு?" "சி.பி.ஐ அதிகாரிகளைத்தான்!"

"அந்தப் பத்திரிகை அலுவலகத்தை ஏன் தாக்கறாங்க?"
"கட்சியின் மூத்த தலைவர்னு போடறதுக்குப் பதிலா, கட்சியின் முத்த தலைவர்னு போட்டுட்டாங்களாம்."

"தமிழர்களின் துயரத்தில் நானும் பங்கு எடுத்துக்கொள்கிறேன்!"
"சொன்னேன்ல... நம்ம தலைவர் எதுலயும் 'பங்கு' எடுத்துக்காம விட மாட்டார்னு!"