சின்னவீடு
ஒருவன்: "எங்க வீட்டில எதுவும் எங்கப்பா சொன்னதுதான் முடிவு...!"
மற்றவன்: "கரெக்டா சொல்லிடுவாரா?"
ஒருவன்: "ஆமாம். ராத்திரியிலேயே எங்கம்மா கிட்ட கேட்டு வைத்துக் கொள்வார்...!"
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா..."
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"
"தலைவரோட 'சின்னவீடு'ங்கள்லாம் பதவிக்காக போர்க்கொடி தூக்கறாங்களா...?"
"ஆமாம்... அவங்களுக்கும் இணை மனைவி, துணை மனைவி மாதிரியான அந்தஸ்து வேணுமாம்...!"
"என்னது.... போர்டுல உள்ள ஒரு எழுத்தும் தெரியலையா?"
"ஆமா டாக்டர், ஆனா, உங்க நர்ஸ் மட்டும் அழகா தெரியறாங்க!"
ஒருத்தி: "எங்க இருபத்தைந்தாவது மணநாளுக்கு ராப்பிச்சை ஒரு பரிசு அனுப்பியிருக்கான்..."
மற்றவள்: "என்ன அது?"
ஒருத்தி: "ருசியாக சமைப்பதெப்படிங்கற புஸ்தகம்தான்."
