பல்செட்
"உங்களுக்கு என்ன வகையான லோன் வேணும்?"
"திருப்பிக் கட்டாத லோன் கொடுங்க...!"
பல் டாக்டர்: "வரவர இந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியல."
மற்றவன்: "ஏன் என்னாச்சு."
பல் டாக்டர்: "பல்வலின்னு வந்த ஒருவர் பல்செட்டைக் கழட்டிக் கொடுக்கிறாரு..."
ஒருவர்: "ஏதாவது தேவைன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யணும் புரியுதா?"
மற்றவர்: "அப்ப உங்க பேங்க் பேலன்ஸ்லப் பாதியைக் கொடுத்துட்டு போங்க...!"
"என்ன சார் கல்யாண வீட்டில வந்து என் செருப்பைப் போடறீங்க...?"
"உங்களுக்கு முன்னாடியே இதை நான் பார்த்து வைத்து விட்டேங்க...!"
"உங்கள் கணவருக்கு ஓய்வு மிகவும் தேவை. இந்த தூக்க மாத்திரையைப் பயன்படுத்துங்கள்."
"டாக்டர், மாத்திரையை எப்போது கொடுக்க வேண்டும்?"
"இந்தத் தூக்க மாத்திரை அவருக்கில்லை, உங்களுக்குத்தான். உங்கள் கணவர் நல்ல ஓய்வு எடுக்கவும், விரைவில் குணமாகவும் இதுதான் ஒரே வழி".
