சாப்ட்வேர்
செந்தில்: அண்ணே...அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....?
கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா.......'செடி'ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு..... 'மரத்த' புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு........
இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு 'ஆல் இன் ஆல்' அழகு ராஜா தேவைங்குறது என்னங்க நான் சொல்றது.........
"என்ன ராப்பிச்சை.., இது என்ன பத்திரிகை?"
"என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிகைம்மா அவசியம் வந்திருங்க".
தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?
மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.
தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!
மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.
காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா.
காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன்.
காதலி: அப்புறம்?
காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...
மாமனார்: மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?
தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?
மாமனார்: பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு..
