பூசணிக்காய் அல்வா
"போயும் போயும் மாலை போட்டதுக்கா தலைவர் ரொம்ப கோபமா இருக்கார்...?"
"ஆமாம்.. தலைவரோட படத்துக்கு மாலை போட்டாங்களாம்...!"
"எதுக்குடி மேனேஜர் அறைக்கு பால் கொண்டுட்டுப் போறே...?"
"அவர் ஆபீஸ்லகூட பால் குடிச்சுட்டுத்தான் தூங்குவார்னு உனக்குத் தெரியாதா...?"
"உங்க ஓட்டல்ல எப்பவும் அமாவாசைக்கு அடுத்த நாள் ஏன் பூசணிக்காய் அல்வா போடறீங்க...?"
"அமாவாசை அன்னிக்கு நிறைய பேர் ரோட்டுல பூசணிக்காய் உடைப்பாங்களே..."
"கண் பார்வை ரொம்ப மோசமாயிடுச்சுன்னு எதை வச்சு சொல்றீங்க...?"
"நேத்து வேலைக்காரின்னு நெனச்சு மனைவியைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துட்டேன் டாக்டர்...!"
"இது ரொம்ப திமிர் பிடிச்ச குடும்பமா இருக்கும் போலிருக்கு...."
"எப்படிச் சொல்றீங்க...?"
"பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமான்னு கேட்டா, சமைக்க வைக்கத் தெரியும்ங்கறாங்களே...!"
