சாணக்கிய நீதி அல்லது அர்த்தசாஸ்திரத்தின் பயன்பாடு

சாணக்கிய நீதி அல்லது அர்த்தசாஸ்திரத்தின் பயன்பாடு

bookmark

(i) மாணவர்களுக்கு : இந்த அர்த்தசாஸ்திரம் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது . இதன் மூலம் மௌர்யர் கால ஆட்சி முறையை தெரிந்து கொள்ளலாம். அத்துடன் , அவர்கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கையும் அறிந்து கொள்ள உதவும் படிக் கொடுத்து  உள்ளோம்.அதுவும் குறிப்பாக CBSE  மாணவர்களுக்கு இந்தப்  படைப்பு   பெரிதும் உதவும்.    

(ii) ஆசிரியர்களுக்கு : ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த சாணக்ய நீதி அல்லது அர்த்த சாஸ்திரம்  ஒரு வரப்பரசதமாக இருக்கும். குறிப்பாக சரித்திரம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் ,  இதனை படித்து மாணவர்களுக்கு மேற்கொண்டு மௌர்யர் கால ஆட்சியை நன்கு ஆதாரத்துடன் விளக்கமுடியும் என்று முழுமையாக நம்புகிறோம் .

(iii) தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு : இந்த சாணக்ய நீதியை ஒரு முறை படித்துப் பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன , என்பதை சாணக்யர் அழகாக  விளக்கி இருப்பார். உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி, உயிரின் மதிப்பு வாழ்கையின் சிறப்பு போன்றவற்றுடன், பன்னிரெண்டாம் அத்யாயத்தில் தற்கொலை எவ்வளவு பெரிய கோழைத்தனம் என்பதையும். அவ்வாறு செய்பவர்களின் உடலை  அக்காலத்தில் எவ்வாறு சமூகம் கேவலமாக நடத்தியது, பார்த்தது போன்றவற்றையும் சாணக்கிய நீதி விளக்கி உள்ளது. இதன் மூலம் , உங்களுக்கும் போராடும் எண்ணம் வரும், வாழ வேண்டும் என்ற ஆசை வரும்.

(iv) காவல் துறை மற்றும் புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்களுக்கு : இந்த சாணக்கிய நீதி உங்களுக்கும் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். எவ்வாறு கொலைக்கான விசாரணையை நடத்துவது என்பதை,  புதிதாய் இத்துறையில் சேர்ந்தவர்களுக்கு சாணக்கியர் அழகாக விளக்கி உள்ளார். பல வருட காலம் பணியாற்றியவர்களும் இதனைப் படிக்கலாம் , உங்களுக்கும் கூட எதாவது கொலை, குற்றம் சம்மந்தமான விஷயத்தில்  க்ளு ( clue) கிடைக்கலாம்.

(v) அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு : நண்பர்களே, நீங்கள் அரசு வேலைக்கு தயாராகி வருகின்றீர்களா? அப்போது என்றால் இந்த சாணக்ய நீதி என்னும் அர்த்தசாஸ்திரம் உங்கள் கையில் தவழும் ஒரு பூங்கொத்து . பெரும்பாலும்,  அரசு வேலைக்கான நுழைவுத் தேர்வில் சரித்திரம் சம்மந்தமான கேள்விகள் தவிர்க்க முடியாதது தான். இதில் நாங்கள் மௌர்யர்களின் ஆட்சிமுறையைத் தந்துள்ளோம். அது  தவிர,  நாளை உங்களுக்கு அரசு வேலையே கிடைத்தாலும் , ஒரு அரசாங்கத்திடம் எவ்வாறு பணியாற்றி  நல்ல பெயரை எடுப்பது போன்ற விஷயங்களையும் சாணக்யர் எடுத்துக் கூறி இருக்கிறார்.

(vi) பெரிய தொழில் முனைவோருக்கும், பெரிய நிறுவனங்களை  நடத்தும்  முதலாளிகளுக்கும் : உங்களுக்கும் கூட இந்த சாணக்கிய நீதி பேருதவி செய்யும் ஒரு வழிகாட்டி தான். காரணம், நீங்கள் தான் ( உண்மையாக சொல்லப்போனால் ) இந்த ஜனநாயக நாட்டின் முடி சூடா மன்னர்கள் . நம் நாட்டின் பொருளாதாரத்தையே  தூக்கி உயர்த்தும் மிகப் பெரிய பாரமான பொறுப்பு உங்கள் தோள்களில் தான் சுமத்தப்பட்டு உள்ளது. நீங்கள் தான் அரசர்கள், நீங்கள் நடத்தும் நிறுவனம் தான் உங்கள் ராஜ்ஜியம். ஆக, உங்கள் ராஜ்ஜியத்தை நல்ல முறையில் நடத்த, போட்டிக் கம்பனிகளை சமாளிக்கும் யுத்தியையும் . உங்களிடம் பணியாற்றும் தொழிலாளிகளை வேலை வாங்கும் கலையையும்  சாணக்கிய நீதியில் கௌடில்யர் அழகாக எடுத்து உரைத்து உள்ளார்.கொஞ்சம்  படித்துத் தான் பாருங்களேன் .

(vii) சாமான்ய  மக்களுக்கு  : சாமான்ய மக்களைப் பொருத்தவரை இந்த அர்த்தசாஸ்திரம் அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக  இருக்கும். வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், நேர்முக, மறைமுக  எதிர்ப்புகளில் இருந்து வெற்றி பெரும் விதம் போன்றவை இதில் தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது .படித்துப் பயன் பெறுங்கள். அத்துடன் தர்மத்தைக் கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகளும் எடுத்து உரைக்கப்பட்டு உள்ளது. சுருக்கமாகச் சொன்னாள், இன்று நீங்கள் தர்மத்தைக் காப்பாற்றினால் அந்த தர்மம் நாளை உங்களைக் காப்பாற்றும் என்பதை சாணக்யர் விரிவாக எடுத்துக் கூறி இருப்பதை இங்கு  காணலாம். 

(viii) நிர்வாக மேலாளர்கள் :  உங்களைப்  பொருத்தவரை  உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை கட்டுப்படுத்தும் வழி முறைகளை இங்கு கௌடில்யர் அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார். யாரை எவ்வாறு வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கௌடில்யர் எளிதாகப் புரியும் படி  எடுத்துக் கூறி உள்ளார். உங்களுக்கும் கூட பயனுள்ள விதத்தில் அனைத்து விளக்கங்களும் இதில் தரப்பட்டு உள்ளது. வாருங்கள் படித்து பிரச்சனையைக் கையாளும் முறையை அறிந்து கொள்ளுங்கள்.

(ix) பெண்களுக்கு : ஒரு பெண் சமூகத்தில் எப்படி நடந்து கொண்டாள், இச்சமூகம் அவளை உயர்த்தும் என்றும். பெண்களுக்கு உள்ள கடமைகளையும், அக்கடமைகளை செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் அழகாக இந்த நீதி நூலில் விளக்கி  உள்ளார் சாணக்யர். படித்துப் பயன்பெறுங்கள்.

(x) அரசியல் வாதிகளுக்கு : அரசியல் வாதிகளான உங்களுக்கு இந்த சாணக்ய நீதி பற்றி அறிமுகம் தேவை இல்லை. என்றாலும், ஒரு நல்ல அரசியல் வாதி எப்படி இருக்க வேண்டும். அப்படி நல்ல முறையில் அவர் செயல்பட்டால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதனைக் கையாளும் முறைகள் பற்றி கௌடில்யர் அழகாக எடுத்துக் கூறி உள்ளார். படித்துப் பயன் பெறுங்கள் .