சலவைக்கல்
1. "என்னது! துணி துவைக்க தாஜ்மகாலுக்கு போகப் போறியா?"
"ஏன்?"
"அங்கே தானே சலவைக்கல் நிறைய இருக்கு!"
2. "ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?"
"சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."
3. "என்னைக்கும் இல்லாம, உங்க வீட்டுக்காரர் "டை" கட்டிக்கிட்டு ஆபீஸ் கிளம்பறாரே.. ஏன்?"
"இளநரையை மறைக்க "டை" யூஸ் பண்ணச் சொன்னாங்களாம்...!"
4. "சிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?"
"ஆமா"
"தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா?"
"போட்டாச்சு."
"ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.... என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்."
5. "எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?"
நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!"
