குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்
விளக்கம் :
நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்ததுதான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இருந்து பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன, குருவிக்கு தக்கன ராமேஸ்வரம். குருவிக்கும், ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்மந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால், தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். நாளடைவில், பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று மாறிப்போனது.