கார்முகப் படலம் - 808

bookmark

808.    

‘மரா மரம் இவை என
   வலிய தோளினான்;
“அரா-அணை அமலன்” என்று
   அயிர்க்கும் ஆற்றலான்;
‘இராமன்’ என்பது பெயர்;
   இளைய கோவொடும்.
பராவ அரு முனியொடும்.
   பதி வந்து எய்தினான்;
 
(அந்தக்    குமரன்) இவை மராமரம் என-  மராமரம் என்னும்படி;
வலிய  தோளினான் -  வன்மையான  தோள்களையுடையவன்;  அரா
அணை  அமலன்  என்று  -  ஆதி சேடனாகிய படுக்கையில்  பள்ளி
கொள்ளும்   திருமால்தான்   அவதரித்தானோ  என்று;   அயிர்க்கும்
ஆற்றலான்   -  ஐயுறக்  கூடிய  ஆற்றல்  படைத்தவன்;   பெயர் -
(அவனுக்கு)  அவனது  பெயர்;  இராமன் என்பது - இராமன் என்பது
(அவன்);  இளைய  கோவொடும்  - தம்பியான அரச  குமாரனோடும்;
பராவ   அரு   முனியொடும்  -  அளவிட்டுப்  புகழ்வதற்கு  அரிய
முனிவனோடும்;  பதி  -  (நம்) நகரை;  வந்து  எய்தினான் -  வந்து
சேர்ந்தான்.

தசரதன்  மைந்தனான  இராமன் தம்பியோடும் விசுவாமித்திரனுடனும்
மிதிலை நகர்க்கு வந்தான்.                                   59