கலியாணப் பத்திரிக்கை
ஒருவன்: என்னடா அந்தப் பொம்பளை உங்கிட்டே வந்து ஏதோ கத்திட்டு போகுது.
அடுத்தவன்: வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத உனக்கு மீசை தேவையான்னு கேட்டுட்டுப் போகுதுடா.
அவன்: அப்ப மீசையை எடுத்துட்டா கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் போலிருக்கு.
"குதிரையைத் தட்டிவிட்டேன்? என்னைக் கொலைகாரன்னு பிடிச்சிக்கிட்டு வந்துட்டாங்க!"
"எந்தக் குதிரையை?"
"துப்பாக்கியிலுள்ள குதிரையைத் தட்டி விட்டேன்! ரெண்டு பேர் செத்துப்போயிட்டாங்க!"
"எந்தப் பத்திரிக்கை வந்தாலும் உடனே ஆசிரியருக்குக் கடிதம் எழுதிப் போட்டிருவேன்!"
"கலியாணப் பத்திரிக்கை வந்தாலுமா?"
"சீதா பேனாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க டீச்சர்!"
"இராவணன் தான் தூக்கிட்டுப் போயிருப்பான்! அவன் ஏற்கனவே சீதாவைத் தூக்கிட்டுப் போன களவாணி!"
"ஏன் அந்த ஆளு படபடன்னு புகையிறாரு?"
"ஸ்கூட்டர்லதான் கடன் வாங்க வருவாராம்! அதனாலே ஸ்கூட்டர் லோன் வேணுமாம்!"
