கடிமணப் படலம் - 1328

bookmark

வசிட்டன் வருதல்

வசிட்டன் திருமணச் சடங்கு செய்தல்
 
1328.    

நீந்த அருங் கடல் என. நிறைந்த வேதியர்.
தோய்ந்த நூல் மார்பினர். சுற்ற. தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு. வசிட்டன். மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான்.
 
நூல்     வேய்ந்த   மார்பினர்   -   முப்புரி   நூல்    பூண்ட
மார்பினையுடையவர்களான;  நிறைந்த  வேதியர்  -  வேதம் நிறைந்த
அந்தணர்கள்;  நீந்து  அரும் கடல் எனச் சுற்ற - நீந்துதற்கரிய கடல்
போன்ற  எண்ணற்கரியராய்ச்  சுற்றிலும்   வர;  வசிட்டன்  - வசிட்ட
மாமுனிவன்; தொல்நெறி  வாய்ந்த நல் வேள்விக்கு - பழைமை நெறி
முறைப்படியமைந்த   திருமணச்  சடங்குகளை  நிகழ்த்துதற்கு; மை அற
ஏய்ந்தன  கலப்பையோடு இனிதின் எய்தினான்  -  குற்றமில்லாமல்
(சாத்திர  முறைக்குப்) பொருந்திய  கருவிகளுடன  மகிழ்வோடு  (அங்கு)
வந்தடைந்தான்.

கலப்பை:  துணைக் கருவிகள்  கொண்ட  பை  “காவினம்  கலனே:
சுருக்கினெம் கலப்பை’’ (புறம். 206 -10) என்பார்.                  83