எழுச்சிப் படலம் - 823
வள்ளுவன் பறையறைதல்
823.
வானம் பரி விரி திரைக் கடலை. வள்ளுவன்.-
தேம் பொழி துழாய் முடிச் செங் கண் மாலவன்.
ஆம் பரிசு. உலகு எலாம் அளந்துகொண்ட நாள்.
சாம்புவன் திரிந்தென. - திரிந்து சாற்றினான்.
தேம் பொழி- தேனைச் சொரிகின்ற; துழாய்முடி - துழாய்
மாலையணிந்த திருமுடியையும்; செங்கண் மாலவன் - சிவந்த
கண்களையும் கொண்ட திருமால்; ஆம் பரிசு - (தன்) முறைமைக்கு
ஏற்றவாறு; உலகு எலாம் - (சுவர்க்கம். மத்திமம். பாதாளம் என்ற)
மூவுலகங்களையும்; அளந்து கொண்டநாள் - (தன் மூவடியால்)
அளந்து கொண்ட காலத்தில்; சாம்புவன் - (அச்செய்தியை)
சாம்பவான்; திரிந்து என - பறையறைந்து திரிந்தது போல; வாம்பரி -
தாவிச் செல்லும் குதிரைகளாகிய; விரிதிரைக்கடலை - விரிந்த
அலைகளையுடைய கடலுக்கு (சேனைக்கு); வள்ளுவன் -
பறையறையும் வள்ளுவன்; திரிந்து சாற்றினான் - திரிந்து (முரசு
அறைந்து) செய்தி தெரிவித்தான்.
வள்ளுவன் - முரசு அறைந்து செய்தி தெரிவிப்போன். மாலவன்
உலகெலாம் அளந்து கொண்ட நாள் சாம்புவன் திரிந்தென வள்ளுவன்
திரிந்து சேனைக் கடலுக்குக் கூறினான். தாவிச் செல்லும்
குதிரைகளைக் கடல் அலைகளுக்கு ஒப்புக் கூறுதல் மரபு. 8
