எழுச்சிப் படலம் - 824
முரசொலி கேட்டோர் மகிழ்தல்
824.
சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்.
கோல் தொடி மகளிரும். கோல மைந்தரும்.
வேல் தரு குமரரும். வென்றி வேந்தரும்.
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினார்.
மண முரசு முழங்கியது;கேட்ட மகளிர் ஆடவர். வேல் தாங்கிய
வீரர். அரசர் ஆகியோர் காற்றினால் பொங்கும் கடலென மகிழ்ந்தனர்
என்னும் செய்திகள் இதிற் சொல்லப் பெறுகின்றன. 8-1
