எங்கள் இயேசு பாலனை கைகளில் தாங்கிய

bookmark

எங்கள் இயேசு பாலனை கைகளில் தாங்கிய
தூய நெஞ்சம் கொண்ட புனிதரே
தேடிவரும் பக்தருக்கு கோடிப் புதுமை செய்திடும்
புனிதரே உன் நாமம் வாழ்க (2)

1. கடலில் மீன்கள் இறைவார்த்தையைக்
கேட்பதற்கு புதுமை புரிந்தீர்
சிலுவையினை அன்பு செய்த மாமுனியே -2
இயேசுவுக்காய் வாழ்ந்திட ஆசைகொண்டு -2
நற்செய்தி வழியிலே துறவியானீர்
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் -2

2. பேய்களும் நடுங்கிப் போகுமே ஐயா
உன் திருநாமம் சொல்லும் போதிலே
ஊமைகளைப் பேசச் செய்யும் புதுமைப் புனிதரே -2
அடிமைகளை மீட்டிடும் நல்ல மேய்ப்பரே -2
சோர்ந்துபோன மனிதருக்கு ஆறுதல் நீரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - 2