உலாவியற் படலம் - 1195
1195.
மான மாகதர். மச்சர். மிலேச்சர்கள்.
ஏனை வீர இலாடர். விதர்ப்பர்கள்.
சீனர். தெங்கணர். செஞ் சகர். சோமகர்.
சோனகேசர். துருக்கர். குருக்களே.
மான மாகதர். மச்சர். மிலேச்சர்கள் - பெருமை மிக்க மாகத
மன்னரும் மச்ச நாட்டரசரும். மிலேச்ச தேசத்தரசரும்; - ஏனை வீர
இலாடர். விதர்ப்பர்கள் - மற்றுமுள்ள வீரமிக்க இலாட மன்னரும்.
விதர்ப்ப மன்னரும்; சீனர். தெங்கணர். செஞ்சகர். சோமகர் - (மகா)
சீன தேசத்தரசரும். தெங்கண தேசத்தரசரும். செம்மையான சக
தேசத்தரசரும். சோமக நாட்டரசரும்; சோனகேசர். துருக்கர்.
குருக்களே - சோனக நாட்டரசரும். துருக்க தேச மன்னரும்.
குருநாட்டரசர்களும். 48
