உலாவியற் படலம் - 1194

bookmark

பல நாட்டு மன்னர்களும் வருதல் ((1194-1196))

மண்டபத்துள் வந்து திரண்ட மன்னர்கள்
 
1194.    

கங்கர். கொங்கர். கலிங்கர். குலிங்கர்கள்.
சிங்களாதிபர். சேரலர். தென்னவர்.
அங்க ராசர். குலிந்தர். அவந்திகர்.
வங்கர். மாளவர். சோளர். மராடரே.
 
கங்கர்.  கொங்கர். கலிங்கர். குலிங்கர்கள்- கங்க   நாட்டரசரும்
கொங்கு  நாட்டரசரும் கலிங்க மன்னரும் குலிங்க  மன்னரும்;  சிங்கள
அதிபர்.  சேரலர்.  தென்னவர்  - சிங்கள அரசரும். சேர மன்னரும்.
பாண்டிய அரசரும்;  அங்கராசர்  குலிந்தர்.  அவந்திகர்  -  அங்க
நாட்டரசரும்.   குலிந்தநாட்டரசரும்.   அவந்தி  மன்னரும்;   வங்கர்.
மாளவர்.  சோளர்.  மராடர் - வங்க மன்னரும். மாளவதேசத்தரசரும்.
மராட மன்னரும்.

இப்பாடலுடன்   மேல் வரும் இருபாடல்களும் சேர்ந்து ஒரு தொடர்.
இப்பாடலில்.   அடைமொழியே   இன்றி.   அரசர்     பெயர்களையே
இணைத்து கவியோசை குன்றாமல் இணைத்திருக்கும் திறம் காண்க.   47