இளஞ்சேரல் இரும்பொறை

bookmark

இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார். இதில்

இளஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன் எனவும் . கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார்..

இவனைக் குறிக்கும் தொடர்கள் அல்லது பெயர்கள்:

சங்க காலப் பாடல்களில் இருந்து கீழ்கண்ட பெயர்களில் இவன் குறிப்பிடப் படுகிறான்.

1. இளஞ்சேரல் இரும்பொறை

2. நிலந்தரு திருவின் நெடியோன்

3. பூழியர் கோ

4. வென்வேல் பொறையன்

5. பல்வேல் பொறையன்

6. பல்வேல் இரும்பொறை

7. கொங்கர் கோ

8. குட்டுவர் ஏறு

9. பூழியர் மெய்ம்மறை

10. மரந்தையோர் பொருநன்

11. பெருநல் யானை இறை கிழவோன்

என்றெல்லாம் இவன் குறிப்பிடப்படுகிறான்.

புலவர்க்குக் கவரி வீசியது:

அரசனின் முரசை நீராட்டிவர எடுத்துச் சென்றிருந்தபோது, அரசனைக் காணவந்த புலவர் மோசி கீரனார் முரசு வைக்கும் பெருமைக்குரிய கட்டிலில் அது முரசுக்கட்டில் என்று தெரியாமல் அதன்மீது படுத்து உறங்கிவிட்டார். அக்கால வழக்கப்படி இது தண்டனைக்குரிய குற்றம். அரசன் முரசுடன் மீண்டபோது புலவர் நிலையைக் கண்டார். புலவரை அவன் தண்டித்திருக்க வேண்டும். மாறாக, உறக்கம் கலைந்து புலவர் எழும் வரையில், அரசன் புலவருக்குக் கவரி வீசிக்கொண்டிருந்தான். அந்த அளவுக்கு இவன் புலவர்களை மதித்தான்.

ஆட்சி:

1. தகடூரைக் கைப்பற்றினான்.

2. கொல்லி மலையை நீண்ட நாள் முற்றுகையிட்டிருந்தான்.

3. தேர்ப்படையுடன் சென்று பகைவரைத் தாக்கினான்

4. இவனோடு போரிட்ட பெரும்பூண் சென்னி போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிய குடைகள் கபிலர் இவனது தந்தையைப் பாடி, பதிற்றுப்பத்து ஏழாம் பத்து பரிசாகப் பெற்ற ஊர்களைக் காட்டிலும் அதிகம்.

கொடை:

புலவர்களுக்கு நல்ல அணிகலன்கள் மற்றும் எண்ணில் அடங்காத ஊர்களை பரிசு அளித்தவன்.

பேரியாறு ஒழுகுவது போல கொடை வழங்குவான்.