இருபது வருட காதலர்கள்
காதலி: "இதோ பாருங்க! உங்க கையை வச்சிக்கிட்டு என்கிட்டே எந்த சில்மிஷமும் பண்ணக் கூடாது. எல்லாம் கல்யாணத்துக்கப்புறம்தான்."
காதலன்: "சரி, அப்போ உன் கல்யாணம் ஆனதும் எனக்குச் சொல்லி அனுப்பு."
"கதை எழுதறக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லீங்க...!"
"நான் உங்க கதையைப் படிச்ச உடனே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.!"
டாக்டர்: "உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே..."
நோயாளி: "உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..."
"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?"
"வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."
"இருபது வருசமா காதலர்களா இருக்கோம்ன்னு சொல்றீங்க. எப்படி?"
"அவளும் தன் கணவர்கிட்ட சொல்லல... நானும் என் மனைவிகிட்ட சொல்லல..."
