அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்

அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்

bookmark


'அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் அல் சௌத்' அவர்கள் சவுதி அரேபியா என அறியப்படும் மூன்றாம் சௌதி அரசின் முதல் அரசர் ஆவார். அவர் ரியாத் நகரில் வகாபி இசுலாமிய இயக்கத்தை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றிய சௌதி இல்லத்தில் (House of Su'ūd) பிறந்தார். இவரது குடும்பம் சௌதியின் உள்நாட்டு நிலப்பகுதியான நெய்ட்டில் ஆண்டு வந்தார்கள். 1902 இல் தமது பரம்பரை சொந்த ஊரான ரியாத்தை மீட்ட பிறகு பின் சௌத் 1922 ஆம் ஆண்டு நெய்ட்டை மீண்டும் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஹெஜாஸ் பகுதியை 1925 ஆம் ஆண்டு வெற்றி கொண்டார். 1932ஆம் ஆண்டு தாம் வெற்றிகொண்ட பகுதிகளை ஒன்றிணைத்து இன்றைய சவுதி அரேபியாவை நிறுவினார். அவரது ஆட்சியில் 1938 ஆம் ஆண்டு பாறைநெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சௌதியின் பொருளியல் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டார்.

அவர் பின் அரசாட்சி செய்த மன்னர்கள் உட்பட அப்துல் பின் சௌத்திற்கு பல குழந்தைகள் பிறந்தனர்.

சவூதி அரேபியாவின் அப்துல்லா

சவூதி அரேபியாவின் அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ் (1 ஆகத்து 1924 - 23 ஜனவரி 2015) சவுதி அரேபியாவின் அரசராக 2005 ல் இருந்து 2015 வரை இருந்தவர்.

இவரது இளமைக் காலம்

அப்துல்லா ஆகஸ்ட் 1 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் ரியாத்தில் பிறந்தார். இவர் மன்னர் அப்துல் அஜீஸின் பத்தாவது மனைவியின் முதல் மகன் ஆவார்.

தேசிய பாதுகாப்புப் படை தளபதி பொறுப்பில்

1963 ம் ஆண்டில், அப்துல்லா, சவுதி தேசிய பாதுகாப்புப் படை தளபதியாகப் பொறுப்பேற்றார். இப்பதவி இவருக்கு ஹவுஸ் ஆப் செளத் எனப்படும் அரச குடும்பத்தில் பங்கு பெற வாய்ப்பளித்தது.

இவரது மரணம்

சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல் லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக் குறைவு காரணமாக 23-01-2015 வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி்க்கு (சவுதி நேரப்படி) காலமானார்.