அகலிகைப் படலம் - 537
கங்கையின் சிறப்பு
537
‘அண்ட கோளகைப் புறத்தது ஆய்.
அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப்
பிறந்து. பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய். பகிரதன்
தவத்தினால் கொணர.
மண்தலத்து வந்து அடைந்தது.
இம் மா நதி. மைந்த!
திருமால் உலகம் அளந்த காலத்தில் அப்பரமன் திருவடி
சத்தியலோகம் செல்லப் பிரமன் தன் கைக் கமண்டல நீர் கொண்டு
அத்திருவடியைக் கழுவினான். அந்தப் புனித நீரே கங்கையாகியது
என்பது அக் கங்கையைப் பகீரதன் தவத்தால் பூவுலகு கொணர்ந்தான்
என்றான் விசுவாமித்திரன். 5-28
