அகலிகைப் படலம் - 538

bookmark

கங்கையின் வேறு பெயர்கட்குக் காரணம்

538.    

‘சகரர்தம்பொருட்டு அருந் தவம்
   பெரும் பகல் தள்ளி.
பகிரதன் கொணர்ந்திடுதலால்.
   “பகிரதி” ஆகி.
மகிதலத்திடைச் சன்னுவின்
   செவி வழி வரலால்.
நிகர் இல். “சானவி” எனப் பெயர்
   படைத்தது. இந் நீத்தம்.
 
பகல் - (நாள்) - ஆகு பெயர்.

கங்கை     நதி பகீரதன்  கொண்டு  வந்ததால்  ‘பாசீரதி’  என்னும்
பெயரைப்     பெற்றது;  பூவுலகிலே    சன்னுவின்   காது   வழியாக
வெளிப்பட்டதால் ‘சானவி’ என்னும் பெயரை அடைந்தது என்பது.  5-29