அகலிகைப் படலம் - 533

bookmark

கங்கையை ஒரு சிறிது பூமியில் விடுதல்

533.    

‘புல் நுனித் தரு பனி என.
   வர நதி. புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும்.
   வணங்கினன். திகைத்து.
மன்னன் நிற்றலும். “வருந்தல்; நம்
   சடையள். வான் நதி இன்று”
என்ன விட்டனன். ஒரு சிறிது;
   அவனி போந்து இழிந்தாள்.
 
போந்து- புகுந்து - மருஉ மொழி; புல்  நுனி  தரு  பனி என -
கங்கைக்கு உவமை.

கங்கை     சிவனது  சடையில் மறைந்துவிட்டதைப் பகீரதன் கண்டு
திகைத்தான்.  அச்சிவன்   அவன்  கலக்கத்தைப்  போக்கிக் கங்கையில்
சிறிதுவிட அது பூமியில் பெருகியது என்பது.                   5-24