அகலிகைப் படலம் - 516

bookmark

கபிலர் சினத்தால் சகரர் சாம்பராதலும் தூதர்
அரசற்கு அதனை அறிவித்தலும்

516.    

‘மூளும் வெஞ் சினத்து அருந் தவன்
   முனிந்து. எரி விழப்ப.
பூளைசூடிதன் நகையினில்
   எயில் பொடிந்தனபோல்.
ஆளும் மைந்தர் ஆறு - அயுதரும்
   சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு
   உரைத்தனர். வேயர்.
 
பூளை சூடி  -  சிவன்; பூளை  - (மலர்) - முதலாகுபெயர். இதனை
உழிஞை என்பர்.

தவம்    கலைந்த கபில முனிவன் கோபத்தால் சீறினான் - அவனது
சாபத்தால்  அரச  மைந்தர்   அறுபதினாயிரவர்   சாம்பரானார்கள்  -
இச்செய்தி சகரனுக்கு எட்டியது என்பது.                        5-7