அகலிகைப் படலம் - 517

bookmark

அம்சுமான் குதிரைகொணரப் பாதலஞ்சேர்தல்

517.    

‘உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்;
   உணர்வு ஒழியா.
அழைத்து மைந்தன்தன் மைந்தனை.
   “அவர் கழிந்தனரேல்.
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?”
   என. அவன் எழுந்து.
தழைத்த மா தவக் கபிலன் வாழ்
   பாதலம் சார்ந்தான்.
 
ஏல்  - (என்னில்)  எதிர்கால  வினையெச்சத்திரிபு;  அம்சுமான் -
சகரனுடைய மைந்தனுக்கு மைந்தன்.

தன்     மைந்தர்  அறுபதினாயிரவர்  மாய்ந்தது  கேட்டுச்   சகரன்
வருந்தினான்.   அங்ஙனம்   வருந்தினும்  வேள்வியைச் செய்து முடிக்க
உறுதி கொண்டான் என்பது.                                 5-8