அகலிகைப் படலம் - 512

bookmark

சகரன் வேள்விக் குதிரையை இந்திரன் ஒளித்தது

512.    

‘திண் திறல் புனை சகரனும்.
   தனையர் சேவகங்கள்
கண்டு. முற்றிய அய மகம்
   புரிதலும். கனன்று.
வண்டு துற்று தார் வாசவற்கு
   உணர்த்தினர். வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது
   இடையினில் ஒளித்தான்.
 
அசுவமேத      யாகம்   செய்யக்   கருதிய   சகரன்  குதிரையை
அனுப்பினான்;  அக்குதிரையை   இந்திரன் மாயையால்  கவர்ந்துசென்று
தவத்திலுள்ள      கபில    முனிவனுக்குப்பின்னே    ஒரு   மரத்தில்
கட்டிச்சென்றான் என்பது.

நூறு அசுவமேத  யாகங்கள்  செய்பவன்  இந்திர பதவி அடைவான்.
அதனால் இந்திரனால் அந்த யாகத்தை ஏற்க முடியவில்லை.        5-3