அகலிகைப் படலம் - 510
கங்கையின் வரலாறு
510.
‘இந்த மா நதிக்கு உற்று உள
தகைமைய யாவும்.
எந்தை! கூறுக’ என்று இராகவன்
வினவுற. ‘எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான்.
அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன். சகரன்.
இம் மேதினி புரந்தான்.
சகரன் - நஞ்சோடு பிறந்தவன்; கரம் - விடம்; மேதிநீ -
திருமாலால் வதைக்கப்பட்ட மதுகைடபர்களின் மேதசால் (கொழுப்பு)
நனைந்தது என்னும் பொருளது.
சூரிய குலத்தவன் அயோத்தியை ஆண்டவன் சகரன் என்பவன்.
விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றை இராமனுக்குச் சொல்ல
முற்படுகையில் அச்சகரனைக் குறித்துக் கூறுகிறான் என்பது. 5-1
