அகலிகைப் படலம் - 511

bookmark

சகரனுடைய புத்திர பௌத்திரர்கள்

511.    

‘விறல் கொள் வேந்தனுக்கு உரியவர்
   இருவரில். விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு
   அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென்
   சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதி
   னாயிரர் வலத்தார்.
 
சுமதி  -   காசிபனுக்கு   விநதையிடம்   தோன்றியவள்;  சுமதி -
நல்லறிவுடையவள் என்பது பொருள்.  

சகரனுக்கு  இரு  மனைவியர்.  முதல்  மனைவியான கேசினிக்கு ஒரு
மகன் - அசமஞ்சன்;இளையவள் சுமதிக்கு அறுபதினாயிரவர்.      5-2