அகலிகைப் படலம் - 507
திதி தவம்செய்த இடமூம் சரவணமும் காட்டல்
507.
‘ஆயது இவ் இடம்; அவ் இடம்
அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின்
தோன்றியே. தொல்லை
வாயுவும் புனல் கங்கையும்
பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம்
என்பதும் தெரித்தான்.’
சரம் - நாணல்; வனம் - காடு; சரவணம் - நாணற்காடு.
சிவனுக்கு உமை வாயிலாகப் பிறந்த சுப்பிரமணியக்கடவுள் வளர்ந்த
சரவணக் காடு இது என்று விசுவாமித்திரன் கூறினான் என்பது. 3-28
