அகலிகைப் படலம் - 498

bookmark

திருமால் பாற்கடலைக் கடையுமாறு கட்டளையிடல்

498.    

“மத்து மந்தரம்; வாசுகி
   கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர்
   வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்;
   ஓடதி கொடுத்து.
கத்து வாரிதி மறுகுற.
   அமிழ்து எழக் கடைமின்;
 
மந்தர     மலை- மத்து; வாசுகி என்னும் பாம்பு - கடை கயிறு;
சந்திரன்  -  அடை தூண்; தேவர். அசுரர் - இருபக்கமும் கயிற்றைப்
பிடித்துக் கடைபவர்; ஓடதி - ஓஷதி;அமிர்த வல்லி என்னும் மூலிகை.

இழந்த     செல்வங்களைப்  பெறும்   பொருட்டுப்   பாற்கடலைக்
கடையுமாறு  அத்தேவர்களுக்குத் திருமால் கட்டளையிட்டான் என்பது.
                                                       3-19