அகலிகைப் படலம் - 499

bookmark

தேவர்களின் மகிழ்ச்சி

499.    

‘ “யாமும் அவ் வயின் வருதும்; நீர்
   கதுமென எழுந்து
போமின்” என்று அருள்புரிதலும்.
   இறைஞ்சினர் புகழ்ந்து.
“நாமம் இன்று” எனக் குனித்தனர்.
   நல்குரவு ஒழிந்தது
ஆம் எனும் பெருங் களி துளக்
   குறுதலால். அமரர்.
 
நாமம்  - அச்சம்;  துளக்குறுதல்  -  ஆட்டுதல்;  குனித்தனர் -
கூத்தாடினர்.

பாற்கடல்     கடையுங்கால்    தானும்  துணை  வருவதாகக்  கூற.
அத்தேவர்  மகிழ்ந்து  இனித்  தம்   வறுமை  அகலுமென்று  துணிந்து
கூத்தாடினர் என்றார்.                                      3-20