அகலிகைப் படலம் - 489
489.
‘தழங்கு பேரியும். குறட்டொடு
பாண்டிலும். சங்கும்.
வழங்கு கம்பலை மங்கல
கீதத்தை மறைப்ப.
முழங்கு நான்மறை. மூரி நீர்
முழக்கு என. உலகை
விழுங்க. மால் வரும் விழா அணி
கண்டு உளம் வியந்தான்.
‘மங்கல கீதத்தை மறைப்ப’ - இந்திரனுக்கு இனிமேல்
வரவிருக்கின்ற துன்பத்தைக் குறிப்பாக உணர்த்துவது - அமங்கலம்.
பூமிக்கு முன்பு கடல் படைக்கப்பட்டது - அதனால் ‘மூரிநீர்’ என்றார்.
பேரிகை முதலான பலவகை வாத்தியங்கள் முழங்கும் ஓசை
ஓங்கவும் நான்மறை ஓசை ஒலிக்கவும் இந்திரன் உலாவரும் திருவிழாக்
காட்சியைக் கண்டு துருவாசன் வியந்து நின்றான் என்பது. 3-9
