வாய்க்கால் சண்டை

bookmark

வந்தவர்: உங்கப்பா என்ன பண்றார்?
பையன்: தூங்கிட்டு இருக்கார் சார்!
வந்தவர்: அவர் பேர் என்ன?
பையன்: உ. சுப்பு சார்
வந்தவர்: அவரைக் கொஞ்சம் உசுப்பு!

இளைஞன்: தம்மாத்தூண்டு பையன் நீ... உன்னோட போட்டி போட்டா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

சிறுவன்: அதுவா....? 'உ'-வும் 'எ'-வும்தான் வித்தியாசம்!

கருப்பையா: வயலுக்குள்ள என்ன சண்டை அவங்க ரெண்டு பேருக்கும்? ஒருத்தர் வாயைப் பேத்துடுவேன்கிறார்... இன்னொருத்தர் காலை ஒடச்சிடுவேன்கிறார்.....!

சுப்பையா: ஒண்ணுமில்லங்க... 'வாய்க்-கால்' சண்டைதான்!

மந்திரி: மன்னா.... போர் நடக்கும் என்று நினைத்து தோண்டிய பதுங்கு குழிகளை என்ன செய்வது? அதான் போர் நடக்கவில்லையே!

மன்னா: ப'தூங்கு' குழிகளாக மாற்றிவிடுங்கள்.

"உங்க கடையில மருந்து வாங்கிச் சாப்பிட்டவங்க திரும்பி வர மாட்டாங்களா... ஏன்?"

"அந்த மருந்திலேயே அவங்க போய்ச் சேர்ந்திடுவாங்களே..!"