ஏச்சுரை

bookmark

என்கவுண்டர் ஏகம்பரம்: கன்னியாகுமரியிலிருந்து, மெட்ராஸ் வரைக்கும் ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்கடா... அடி வாங்கறதுக்கு... அண்டர்ஸ்டேண்ட்

வடிவேலு: ஹலோ நேத்து அடிக்க வரேன்னீங்க.... இன்னும் வரவே இல்ல...

மக்கள்: இதோ வரோம்டா எல்லோருமே...

வடிவேலு: ஐயோ... ஒண்ணு கூடிட்டாங்கப்பு... ஒண்ணு கூடிட்டாங்க...

"நம்ம அமைச்சரு... குழாயடி குப்பம்மாளை ஏன் வரச் சொல்லியிருக்கார்?"

"சட்டமன்றத்திலே அமைச்சர் பேச, ஏச்சுரை தயார் பண்ணவாம்!"

"உங்க கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்த உங்க மனைவி ஏன் உங்களை அடிச்சாங்க?"

"கடிதத்தில் சனியன்றே புறப்பட்டு வரவும்னு எழுதியிருந்த இடத்திலே 'றே' இல்லையாம்."

"மொபைல் அது இதுன்னு வந்துட்டதால இப்பெல்லாம் கல்யாணத்துக்கு வாழ்த்து தந்தி வர்றது இல்லைங்க..."

"அங்க பாருங்க... சாப்பிடுற இடத்தில... வாழ்த்த ஒரே தொந்திகளா வந்திருக்காங்க...!"

"என்னங்க... நம்ம கல்யாண நாளைக் கூட மறந்து விட்டீர்களே...!"

"உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விசயத்தை மறக்க மாட்டேன்னு...!"