இளநீர்

bookmark

இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

"மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப் பின்னால் நிறைய பேர் ஓடி வருகிறார்களே... யார் அவர்கள்?"

"அது மன்னரின் புறமுதுகுக்குப் பாதுகாப்பு தரும், பிறர் முதுகிட்ட படையாம்!"

வாழ்க்கையில மகிழ்ச்சியாக இருக்க ஆறெழுத்து மந்திரம் கடைப்பிடிக்கிறேன்னு சொல்றீங்களே... சரவணபவ மந்திரமா?

இல்லை அடங்கிப்போ என்கிற மந்திரம்.

"கடைசி சொட்டு இருக்கும்வரை...." "போராடுவீங்களா தலைவரே...?"

"சே... சே.... தண்ணியடிப்பேன்னு சொல்ல வந்தேன்....!"

எனக்குத் திருமணமாகாததால நாட்டுக்குச் சேவை செய்யலாமுன்னு அரசியலுக்கு வந்தேன்... 

எனக்குத் திருமணம் ஆயிடுச்சு... மனசு வெறுத்து அரசியலுக்கு வந்துட்டேன்.