மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங்
"இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?"
"எதுக்கு?"
"ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!"
பாபு: இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
கோபு: நான்கு!
பாபு: இல்லை / 22
காவல் அதிகாரி: உங்களை அரெஸ்ட் பண்றேன்... வாங்க ஆஸ்பத்திரிக்கு...
அரசியல்வாதி: எதுக்கு?
காவல் அதிகாரி: எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீங்க. அதான்.
"இது என்ன தமிழ் மாதம்- 'ரம்பா மாதம்'?! அப்படி ஒரு மாதம் இருக்கா..?"
"அதுவந்துங்க... தை(Thigh) மாதம்!"
இஞ்ஜினீயரிங் வகுப்பறையில்...
ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.
மாணவர்: என்ன கடனா?
