காம்ப்ளான் பாய்
போலீஸ்: உங்க மேல சந்தேகமா இருக்கு. உங்க வீட்ட காண்பிக்க முடியுமா?
நபர்: இதோ இதுதான் சார் என் வீடு! அதோ போறாரே அவர் எங்க அப்பா. அவர் கூட ஒருத்தர் போறாரே அது நான்தான் சார்.
பூனை: உன் வயசு என்ன?
யானை: பத்து வயசு
பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே
யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய்
பூனை: எனக்கு 15 வயசு
யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே
பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்
யு.கே.ஜி. மாணவன்: நான் ஸ்கூலுக்கு போகல, வேலைக்குப் போறேன்....
அம்மா: யு.கே.ஜி படிச்சிட்டு என்ன வேலைக்குடா போவ?
யு.கே.ஜி. மாணவன்: எல்.கே.ஜி. கேர்ள்ஸ்க்கு டியூசன் எடுப்பேன்.
கமலா: எவ்ளோ நாளாச்சுடி உன்னப் பார்த்து...எப்படி இருக்க?
விமலா: நல்லா இருக்கேன்டி
கமலா: எப்போ பாத்தாலும் உன் கணவரோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பாயே.. இப்போவும் அப்படியேத்தான் இருக்கியா?
விமலா: இல்லடி.. இப்போல்லாம் சண்டை போடுறதே இல்லை.
கமலா: அப்படியா பரவாயில்லையே.. ஏன்.. நீ திருந்திட்டியா?
விமலா: இல்லடி அவர் இறந்துட்டார்!
கணவன்: நம்ம வீட்டுக்கு சாப்பிட எங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.
மனைவி: என்ன திடீர்னு ?
கணவன்: அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.
