மின்மினிப் பூச்சி

மின்மினிப் பூச்சி

bookmark

மின்மினிப் பூச்சி

மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவைதானாம்.

ஒவ்வோர் ஆண்டும் பனி மற்றும் வசந்த காலங்கள் முழுவதும் முடங்கிக் கிடக்கும் முட்டைகளிலிருந்து கோடைக்காலத்தின் மே மாத இறுதியிலிருந்து ஜூன் மாத இறுதிவரை பூச்சிகள் வெளிவரத் தொடங்கும். பொதுவாக அனைத்து வகைகளுக்குமே ஆயுட்காலம் சராசரியாக 2 மாதங்களே. 

அதற்குள் அவை வளர்ந்து தன் அடுத்த சந்ததிக்கான கருக்களை உருவாக்கிட வேண்டும். அந்த முட்டைகள் அடுத்த ஓர் ஆண்டுக்கு அப்படியே செயலற்றுக் கிடந்து அடுத்த ஆண்டின் கோடைக்காலத்தில் மீண்டும் உயிர்கள் பிறக்கத் தொடங்கும்.

தங்கள் குழந்தைகளின் பிறப்பைக் காணும் பேரின்பமோ, தங்கள் பெற்றொரைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்போ அவற்றுக்குக் கிடைப்பதேயில்லை.

இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின் மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து உறிஞ்சிவிடும் பிறகு வலம்வர போய்விடும்

மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில்(enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற இரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதே யாகும்.