மரவட்டை

மரவட்டை

bookmark

மரவட்டை

இதற்க்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர். ஒவ்வொரு கணுவிலும் கால்கள் இருப்பதால் அவ்வாறு பெயர் வந்திருக்கலாம். இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது.

உண்மையில் 22 லிருந்து 750 வரை கால்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

இதன் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓடால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. 

ஆபத்து ஏற்படும்போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் உணர்வு செல்கள் மூலம் ஆபத்தை உணர்ந்ததும் உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கிறது. 

பெரும்பாலான மரவட்டைகள் உடலில் உள்ள துளைகளிலிருந்து சுரக்கும் பலவிதமான இரசாயனங்கள் மூலம் தங்களைக் காத்துக் கொள்கின்றன,

இவற்றில் பெரும்பாலான இனங்கள் இனப்பெருக்கத்திற்கான விந்துக்கள் ஆண் மரவட்டைகளின் கால்கள் மூலம் பெண் மரவட்டைகளுக்கு அனுப்பப்படுகிறது.